புத்ராஜெயா, நவம்பர்.10-
தனது முன்னாள் கணவரால் கொண்டு செல்லப்பட்ட தனது மகளைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியரான எம். இந்திராகாந்திக்கு அரச மலேசிய போலீஸ் படை உதவும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்திராகாந்தியின் கணவர் கே. பத்மநாபன் என்ற ரிதுவான் அப்துல்லாவை கண்டுபிடித்து, இந்திராகாந்தியின் மகளை மீட்பதில் அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற அவர் குறிப்பிட்டார்.
இந்திகாரந்தியின் கணவர் கே. பத்மநாபன், வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அரசாங்கத்தின் SARA உதவித் திட்டத்தில் 100 ரிங்கிட்டை அவர் செலவிட்டுள்ளார் என்றும் பெட்ரோல் சலுகைத் திட்டமான BUDI 95- ஐ தொடர்ந்து பயன்படுத்தி வருகிறாம் என்று அண்மையில் இந்திராகாந்தி அறிவித்து இருந்தார்.
தமது கணவர் மலேசியாவில் பதுங்கியிருப்பதாக இந்திராகாந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.








