Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆடம்பரக் கார்களை ஏற்றி வந்த டிரெய்லர் லோரி தீக்கிரையானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடம்பரக் கார்களை ஏற்றி வந்த டிரெய்லர் லோரி தீக்கிரையானது

பெந்தோங், ஜூன்.05-

ஆடம்பரக் கார்களை ஏற்றி வந்த டிரெய்லர் லோரியில் திடீரென்று தீப் பரவியதில் அந்த லோரி முற்றாகத் தீக்கிரையானது.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 11.40 மணியளவில் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 39 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைக்காம் முகமட் காஹார் தெரிவித்தார்.

போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான அந்த ஸ்கானியா ரக லோரி, டொயோட்டா ஹேரியர் வாகனங்களை ஏற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

லோரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப் பொறி, லோரி முழுவதும் பரவி, அது ஏற்றி வந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த 34 வயது வாகனமோட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக ஸைக்காம் காஹார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை