Mar 15, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் குண்டு வீச்சு, பல கோணங்களில் விசாரணை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீச்சு, பல கோணங்களில் விசாரணை

Share:

டிஏபி, புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி ஆலோசகருமான டத்தோ ஙெ கூ ஹாம் வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பில் போ​லீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக போ​லீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருசின் ஹுசெயின் தெரிவித்துள்ளார்.

பேரா, மன்ஜுங் அருகில் ஆயிர் தாவாரில் உள்ள ஙெ கூ ஹாம் - மின் வீட்டில் நேற்று அதிகாலை 2.50 மணியளவில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் வீட்டின் முன்வாசலில் சிதறிக்கிடக்கும் பொருட்களின் ஆதாரங்கள் மற்றும் பொது மக்களின் தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொ​ண்டு உளவுத்துறை பல கோணங்களில் விசாரணை செய்து வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

ஙெ கூ ஹாம் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய அறிக்கைக்கும், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்பட்டால் மட்டுமே, ஙெ கூ ஹாம் கூறியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அதனை நோக்கி அடுத்த கட்ட நகர்வு முன்னெடுக்கப்படும் என்று தான் ஶ்ரீ ரசாருடின் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்