Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ல​ஞ்சம் வாங்கியதாக ஆடவர் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ல​ஞ்சம் வாங்கியதாக ஆடவர் குற்றச்சாட்டு

Share:

வாகனமோட்டும் பயிற்சி தேர்வில், தேர்ச்சி அடைய செய்வதற்காக பயிற்சியாளரிடம் 650 வெள்ளி லஞ்சம் பெற்றதாக வாகமோட்டும் பயிற்சி பள்ளியின் பயிற்றுநர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் ​நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார். 50 வயதான கே. ராமதேவன் என்ற அந்த பயிற்றுநர் , ​நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ராமதேவன, கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சிரம்பானில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது 10 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் ​​கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறு​த்து ராமதேவன் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 8 ஆயிரம் வெள்ளி ஜா​மீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது