கிள்ளான், ஜூலை.28-
பூச்சோங், அருகில் ஜாலான் ஜுருதெராவில் உள்ள கிள்ளான் ஆற்றுப் பாலம் ஒன்றின் கீழ் பாறை மீது பெண் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.58 மணியளவில் பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அந்தப் பெண்ணின் சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு, சவப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எந்தவோர் ஆவணமும் இல்லாததால் அந்தப் பெண்ணை அடையாளம் காண இயலவில்லை என்று அவர் மேலும் கூறினார்.








