Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக சிகாமட், பத்து பஹாட் பதிவேட்டில் இடம் பெற வேண்டும்
தற்போதைய செய்திகள்

இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக சிகாமட், பத்து பஹாட் பதிவேட்டில் இடம் பெற வேண்டும்

Share:

சிகாமட், செப்டம்பர்.08-

பத்து நாட்களில் தொடர்ந்து நில அதிர்வுக்குரிய பகுதியாக மாறியுள்ள ஜோகூர், சிகமாட்டையும், பத்து பஹாட்டையும் இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக வரைப்படத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று பொதுப்பணி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் கட்டிடங்களின் பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிச் செய்வதற்காக சிகமாட்டையும், பத்து பஹாட்டையும் தேசிய நில அதிர்வு அபாய வரைபடத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் வலியுறுத்தினார்.

இவ்விரு மாவட்டங்களிலும் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்கள், கனிம மற்றும் புவியியல் துறை மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையான மெட்மலேசியா ஆகியவை ஆபத்தின் தன்மையை விவரித்து இருப்பதானது, அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகின்றன என்று அவர் கூறினார்.

நில அதிர்வு அபாய வரைபடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பகுதிக்கும், நில நடுக்கங்களைத் தாங்கும் பெரிய கான்கிரீட் கட்டமைப்புகள் போன்ற வலுவான கட்டுமானங்கள் விவரக் குறிப்புகள் தேவைப்படுகின்றன.

ஆனால், சிகாமட்டில் அந்த விவரக் குறிப்பு இன்னும் வரைபடத்தில் சேர்க்கப்படவில்லை. இதற்கான தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அப்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கங்கள் தொடர்பாக சிகாமட் பொதுப்பணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விளக்கமளிப்பு நிகழ்ச்சியில் அஹ்மாட் மஸ்லான் இதனைத் தெரிவித்தார்.

Related News

இயற்கைச் சீற்றத்திற்குரிய பகுதியாக சிகாமட், பத்து பஹாட் ப... | Thisaigal News