Nov 9, 2025
Thisaigal NewsYouTube
சபாவிற்கு 40 விழுக்காடு வருமானம் வழங்கப்பட வேண்டும்: தீர்ப்பின் உள்ளடக்கம் ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

சபாவிற்கு 40 விழுக்காடு வருமானம் வழங்கப்பட வேண்டும்: தீர்ப்பின் உள்ளடக்கம் ஆராயப்படுகிறது

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.08-

சபா மாநிலத்தின் வருமானத்தில் 40 விழுக்காடு அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று அண்மையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உள்ளடக்கம், சட்டத்துறை அலுலகத்தினால் மிகக் கவனமாக ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

இவ்விகாரத்தினால் எதிர்காலத்தில் எந்தவொரு பிரச்னையும் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து வழிமுறைகளும் ஆராயப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின் கீழ் சபாவின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எடுக்கக்கூடிய முடிவுகள், கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்க உறுதிச் செய்யப்படுவதற்கு இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று ஃபாமி தெரிவித்தார்.

கோத்தா கினபாலு உயர் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. 109 பக்கங்களை உள்ளடக்கிய அந்தத் தீர்ப்பின் நகல் தற்போது சட்டத்துறை அலுவலகத்தினால் ஆராயப்பட்டு வருவதாக ஃபாமி குறிப்பிட்டார்.

கடந்த 50 ஆண்டு காலமாக சபாவிற்கு வழங்க வேண்டிய 40 விழுக்காடு வருமானத் தொகையை மத்திய அரசாங்கம் வழங்காமல் இருப்பது அரசியல் சட்டத்திற்கு முரணானதாகும் என்றும், அந்த 40 விழுக்காடு தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அண்மையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

Related News