கூச்சிங், ஆகஸ்ட்.03-
மலேசியா அணுசக்தியை ஒரு புதிய எரிசக்தி ஆதாரமாகத் தொடங்குவதற்கு வட்டார நாடுகளின் சம்மதம் தேவையில்லை என துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யுசோஃப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளும் இந்தத் திட்டத்தை பரிசீலித்து வருவதாக அவர் கூறினார். இருப்பினும், திட்டம் தொடர்வதற்கு முன்னர் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, அதன் சாதகமான பின்னூட்டத்தைப் பெற்ற பின்னரே அணுசக்தி திட்டம் தொடரப்படும் என உறுதிப்படத் தெரிவித்தார். எரிசக்தி, நீர் உருமாற்ற அமைச்சராகவும் உள்ள அவர், இந்தத் திட்டம் மலேசியாவின் நீண்ட கால, தூய்மையான எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றார்.








