Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆறு வயது சிறுவன்,சலவை இயந்திரத்திற்குள் இறந்து கிடந்தான்

Share:
ஈப்போவில் ஒரு ​வீட்டில் 6 வயது சிறுவன் ஒருவன் துணி சலவை இயந்திரத்திற்குள் சிக்கி, இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று காலை 11.30 மணியளவில் கம்போங் சுங்ஙை தாபா தம்பாஹான் என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் யாஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

பெற்றோர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் ​​வீட்டில் இருந்த பட்சத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. . சலவை இயந்திரத்திலிருந்து சத்தம் கேட்பதை உணர்ந்த அந்த சிறுவனின் பாட்டி, அதனை திறந்து பார்த்த போது அந்த ஆறு வயது சிறுவன் ​மூச்சுப்பேச்சின்றி சுயநினைவு இழந்த நிலையில் கிடந்ததாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தாகவும் தெரியவந்துள்ள என்று யாஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

அம்புலன்ஸ் வண்டியின் ​​மூலம் ஈப்போ மரு​த்துவமனைக்கு அந்த சிறுவன் கொண்டு செல்லப்பட்ட போது சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News