குவாந்தான், பிப்ரவரி.06-
நேற்று வியாழக்கிழமை இரவு, குவாந்தான்-சிகாமட் சாலையின் 143-வது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், 60 வயது டாக்ஸி ஓட்டுநர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இரவு சுமார் 11.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், கிளந்தான், கோத்தா பாருவைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் யுசோஃப், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, முவாட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இவ்விபத்தில், 26 வயது ஆடவரால் இயக்கப்பட்ட சிறிய செடான் இரக காரானது, 56 வயது ஆடவரால் இயக்கப்பட்ட செடான் கார் மற்றும் உயிரழந்தவரால் இயக்கப்பட்ட எம்பிவி கார் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் மொண்டொய் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான நான்கு பேர், சிகிச்சைக்காக குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தானது, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








