Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பண்டார் பாரு நீலாயில் நடந்த தாக்குதல்: ஐவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பண்டார் பாரு நீலாயில் நடந்த தாக்குதல்: ஐவர் கைது

நீலாய், ஜூன்.25-

நீலாய், பண்டார் பாரு நீலாயில் உள்ள திடீர் உணவகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பாராங் வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகப் பேர்வழிகள் மற்றும் காயமுற்ற ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட நால்வருக்கான தடுப்புக் காவல் நாளை வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ள வேளையில் காயமுற்ற ஒருவர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் காயமுற்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், உடலில் கடும் வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி 400 தையல்கள் இடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தகராற்றுத் தொடர்பில் இதுவரையில் எந்தவோர் ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →