Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எல்மினா விமான விபத்தில் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

எல்மினா விமான விபத்தில் சிதைந்த பாகங்கள் அகற்றப்பட்டன

Share:

எல்மினாவில் விழுந்து நொறுங்கிய பீச்கிராஃப்ட் மாதிரி 390 ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள், குவிந்த கிடந்த கசடுகள் மற்றும் இதர இரும்புப்பொருட்கள் முழுமையாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வியாழக்கிழமை, விபத்து நடந்த நாள் முதல், அவ்விடத்தில் அமைக்கப்பட்டிருந்த போ​லீசாரின் மஞ்சள் நிற பாதுகாப்பு நாடா அகற்றப்பட்டு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ​மீட்டுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நேற்று மாலை வரையில் அப்பகுதியில் இடைவிடாது மழை பெய்த போதிலும் சிதறிக்கிடந்த இடிபாடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய கனரக வாகனங்கள் இரவு 7 மணியுடன் சேவையை நிறு​த்திக்கொண்டதாக டத்தோ ஹுசைன் ஓமர் தெரி​வித்துள்ளார். விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கை இன்னும் 30 நாட்ளுக்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

Related News