- பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் அன்வார் நினைவுறுத்து
பல்கலைக்கழக நுழைவுக் கட்டணத்தை செலுத்த இயலாத ஏழை மாணவர்களின் வறுமை காரணமாக அவர்களை புறக்கணித்து விட வேண்டாம் என்று பொது பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் இப்படியொரு உத்தரவு, முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கு வெளியிடப்படுவதையும் பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.
பண வசதியில்லை என்பதற்காக எந்தவொரு மாணவரும் பல்கலைக்கழக பதிவிலிருந்து விடப்பட்டு விடாமல் இருப்பதை அனைத்து பல்லைக்கழகங்களும் உறுதி செய்ய வேண்டும். ஏழ்மையும், வறிய நிலையும் ஒரு மாணவரின் உயர் கல்விக்கு தடையாக இருந்து விடக்கூடாது என்பதையும் பிரதமர் நினைவுறுத்தியுள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று காலையில் பிரதமருடன் நிதி அமைச்சு பணியாளர்கள் எனும் நிகழ்வில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை வலியுறுத்தியுள்ளார்.








