கோலாலம்பூர், ஆகஸ்ட்.17-
இன்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்தும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது, காவல்துறைத் தலைவருடன் புக்கிட் அமான் சிறப்புப் பிரிவுத் தலைவர் இப்ராஹிம் டாருஸும் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் எம். குமாரும் உடன் இருந்தனர். இவர்கள் இருவரும் தங்களது புதிய பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர் மாமன்னரைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.








