பலாகோங், ஆகஸ்ட்.23-
மூதாட்டி ஒருவர் செலுத்திய கார், சாலையை விட்டு விலகி கால்வாயில் பாய்ந்தது. இதில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.50 மணியளவில் சிலாங்கூர், பலாகோங், பண்டார் டாமாய், ஜாலான் டாமாய் பெர்டானாவில் நிகழ்ந்தது என்று தீயணைப்பு, மீட்புப்படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தீயணைப்பு, மீட்புப் படையினர் காரில் சிக்கிய அந்த மூதாட்டியைப் பாதுகாப்பாக மீட்டனர். அவர் சொற்பக் காயங்களுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.








