கோலாலம்பூர், செப்டம்பர்.17-
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் மீதான தாக்குதல் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருக்கும் காணொளிகளில், குற்றவாளிகளின் முகம் சரியாகப் பதிவாகவில்லை என்பதால் இவ்வழக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், கருப்பு உடையணிந்த இரு ஆடவர்கள், ரஃபிஸி மகன் மீது மருத்துவ ஊசியால் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், அந்த ஊசியின் வழியாக உடம்பில் செலுத்தப்பட்டவை குறித்த மருத்துவப் பரிசோதனை முடிவிற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








