Nov 26, 2026
Thisaigal NewsYouTube

சமூக ஊடகங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகடிவதை பதிவுகள் நீக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமூக ஊடகங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகடிவதை பதிவுகள் நீக்கம்

இவ்வாண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட 40,214 பகடிவதை தொடர்பான உள்ளடக்கங்களையும், சிறார்களைப் பாதிக்கும் 55 ஆபாசமான உள்ளடக்கங்களையும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அகற்றியுள்ளது.

இன்று மக்களவையில், இதனைத் தெரிவித்த தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், இணையவழிச் சிறார் பாலியல் சுரண்டலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் போலீஸ் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

இதற்கிடையே, ஆபரேஷன் சைபர்கார்டன் 2026 நடவடிக்கையில் 69 பேர் கைது செய்யப்பட்டதுடன், சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் உட்பட 4 லட்சத்து 98 ஆயிரத்து 690 மின்னணுக் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த வயது சரிபார்ப்பு நடைமுறைகளை அமல்படுத்துவதுடன், சமூக ஊடகப் பயன்பாட்டைக் கண்காணிப்பதில் பெற்றோர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
போலீஸ் பணிநீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு

போலீஸ் பணிநீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ஷீலா வழக்கு

கேபிள் திருட்டில் விபரீதம் – ஒருவர் பலி; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

கேபிள் திருட்டில் விபரீதம் – ஒருவர் பலி; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம் – ஹன்னா இயோவின் உதவியாளரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

கேஎல்எஸ்சிஏஎச் நில விவகாரம் – ஹன்னா இயோவின் உதவியாளரிடம் எஸ்பிஆர்எம் விசாரணை

இராணுவ விமானங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரம் – மேலும் பலர் கைது செய்யப்படலாம்!- ஜஜிபி தகவல்

இராணுவ விமானங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரம் – மேலும் பலர் கைது செய்யப்படலாம்!- ஜஜிபி தகவல்

கோலா கெட்டிலில் இந்திய ஆடவர் கொடூரக் கொலை – உடலில் 16 வெட்டுக்காயங்கள்

கோலா கெட்டிலில் இந்திய ஆடவர் கொடூரக் கொலை – உடலில் 16 வெட்டுக்காயங்கள்

மனித மூலதன மேம்பாட்டில் 25-வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘எச்ஆர்டி விருதுகள் 2026’ கோலாகலமாக நடைபெற்றது

மனித மூலதன மேம்பாட்டில் 25-வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘எச்ஆர்டி விருதுகள் 2026’ கோலாகலமாக நடைபெற்றது