Nov 26, 2026
Thisaigal NewsYouTube

கேபிள் திருட்டில் விபரீதம் – ஒருவர் பலி; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபிள் திருட்டில் விபரீதம் – ஒருவர் பலி; சந்தேக நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி பகுதியில் கேபிள் திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பல் தொடர்பான வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நூசா பெஸ்தாரி பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 34 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலில் சாலை விபத்தாக விசாரிக்கப்பட்ட இச்சம்பவத்தில், டெலிகோம் மலேசியா நிறுவனத்திற்குச் சொந்தமான கேபிள்களைத் திருடியதற்கான குற்றவியல் அம்சங்கள் இருப்பது மேலதிக விசாரணையில் தெரியவந்ததாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்தார்.

இதையடுத்து, கொலை உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →