Nov 26, 2026
Thisaigal NewsYouTube

இராணுவ விமானங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரம் – மேலும் பலர் கைது செய்யப்படலாம்!- ஜஜிபி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இராணுவ விமானங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரம் – மேலும் பலர் கைது செய்யப்படலாம்!- ஜஜிபி தகவல்

இராணுவ விமானப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய கும்பல் தொடர்பான விசாரணையில், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் இன்று தெரிவித்துள்ளார்.

இதுவரை மலேசிய விமானப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கடத்தல் நடவடிக்கையில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் காண விசாரணை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக ஐஜிபி கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களின் தடுப்புக் காவல் காலத்தை நீதிமன்றம் நீட்டித்துள்ள நிலையில், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சிலாங்கூர், சுபாங் விமானப்படைத் தளத்தின் விமானப் போக்குவரத்து மையத்தில் ஐந்து பயணப் பெட்டிகள் மற்றும் ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கடத்தல் கும்பல் அம்பலமானது.

சிலாங்கூர் மற்றும் லாபுவான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க போலீஸ் துறையும் மலேசிய விமானப்படையும் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →