ஐ.நா. பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, ஓர் புதிய அன்பரை இஸ்லாத்திற்கு மதம் மாற்றும் சடங்கிற்கு முன்னிலை வகித்தார். நியூயோர் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் இக்கடமையை நிறைவேற்றினார்.
ஓர் இஸ்லாமியராக மதம் மாறுவதற்கு விருப்பம் கொண்ட ஆண்ட்ரூ வினால்ஸ் என்ற அன்பர்,மதம் மாறுதற்கான சடங்கிற்கு முன்னிலை வகிக்குமாறு நியூயோர்க்கில் உள்ள இஸ்லாமிய சமூகம் தம்மை கேட்டுக் கொண்டதாக பிரதமர் அன்வார் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாக, அந்த கலாச்சார மையத்திற்கு வருகை புரிந்த பிரதமர் அன்வாருக்கு நியூயோர் இஸ்லாமிய சமூகத்தின்ர் மகத்தான வரவேற்பை நல்கினர்.








