தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, மற்றவர்களின் கண்ணியத்தை சிறுமிப்படுத்த வேண்டாம் என்று பெரிக்கத்தான் நேஷனலின் முன்னணி தலைவரும், முன்னாள் கல்வி அமைச்சருமான டாக்டர் ரட்சி ஜிடினை சமய விவகார அமைச்சர் டத்தோ டாக்டர் முஹமாட் நாய்ம் மொக்தார் அறிவுவறுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் நடந்த அமளி துமளியின் போது ரட்சி ஜிடின், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிறுமைப்படுத்தும் நோக்கில் நீங்கள் ஓரின தகாத உறவில் ஈடுபட்டவர் என்று மிக மோசமான கருத்தை வெளியிட்டு இருந்தது, பல்வேறு தரப்பினர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.ஒரு பொது அவையில் மற்றவர்களின் கண்ணியத்தை சிதைக்கும் வகையில் ரட்சி ஜிடின் நடந்து கொண்டது இஸ்லாத்தின் போதனைகளுக்கு முராணன செயலாகும் என்று டாக்டர் முஹமாட் நாய்ம் குறிப்பிட்டார்.12 ஆவது மலேசியத் திட்டத்தின் மத்திய கால ஆய்வறிக்கை மீதான விவாதத்தை முடித்து வைக்கும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உரையாற்றிக்கொண்டு இருந்த அன்வாரை நோக்கி ரட்சி ஜிடின் தகாத வர்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதனால் மக்களவை நடவடிக்கை சுமார் 40 நிமிடம் நிலைக்குத்தியதுடன் அந்த முன்னாள் கல்வி அமைச்சரை அவையை விட்டு வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு சபா நாயகர் ஆளாகினார்.கல்வி அமைச்சராக இருந்தவர், மாணவர்களுக்கு எடுத்தக்காட்டாக விளங்க வேண்டிய ஒரு தலைவர் நாட்டின் பிரதமரை நோக்கி, நாலாந்தர வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பது அவரின் உண்மையான சொரூபத்தை வெளிகொணர்ந்துள்ளது என்று டாக்டர் முஹமாட் நாய்ம் குறிப்பிட்டுள்ளார்.







