Dec 4, 2025
Thisaigal NewsYouTube
டாக்டர் குணராஜ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்
தற்போதைய செய்திகள்

டாக்டர் குணராஜ் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்

Share:

தமது பெயருக்கு முன் டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டு இருப்பது தொடர்பாக உலு சிலாங்கூர் மக்கள் நடவடிக்கை சேவை மையத்தின் தலைவர் டாக்டர் ரா. சிவபிராகாஷ் எழுப்பியுள்ள கேள்வி ஒன்றுக்கு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் விளக்கம் அளித்துள்ளார்.
வர்த்தக நிர்வாகத்துறையில் தாம் மேற்கொண்ட கல்வியின் வாயிலாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி The International Business School Scandinavia உயர்கல்விக்கூடம் தமக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளதாக டாக்டர் குணராஜ் விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்வியின் வாயிலாக பெறக்கூடிய பட்டமே என்றும் நமது மதிப்பை உயர்த்தும் என்ற நம்பிக்கை கொண்ட தாம், காப்புறுதி துறையில் கொண்ட அனுபவத்தை அடிப்படையாக கொண்டு வர்த்தக நிர்வாகத்துறையில் மேற்கொண்ட உயர்க் கல்வியின் காரணமாக தமக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளதாக குணராஜ் விளக்கம் தந்துள்ளார்.

டாக்டம் பட்டம் பெறுவதற்கு தாம் மேற்கொண்ட ஆய்வியலுக்கான தலைப்பு The Study of Factors Affecting Personal Wealth Attainment Retirement Planning என்பதாகும் என்று குணராஜ் தெரிவித்தார்.
அத்துடன் தமக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக அப்பல்கலைக்கழகம் வழங்கிய சான்றதழ், கல்வி மேற்கொண்ட ஆண்டு, சான்றிதழின் பதிவு எண், துறை சார்ந்த கல்வி மற்றும் மேற்பார்வையாளரின் பெயர் முதலிய விவரங்களை திசைகள் தொலைக்காட்சிக்கும் அனுப்பி வைத்து, தமது டாக்டர் பட்டம் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை குணராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்