Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கொலை வழக்கில் எட்டாவது சந்தேகப் பேர்வழி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொலை வழக்கில் எட்டாவது சந்தேகப் பேர்வழி கைது

டிச.5

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி கோலாலம்பூர், செராஸில் ஒரு பேரங்காடியில் வீற்றிருக்கும் சீன உணவகத்தின் பெண் கேஷியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் எட்டாவது சந்தேகப் பேர்வழியை கைது செய்துள்ளனர்.

சீன நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் கேஷியர் கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு எட்டாவது சந்தேகப்பேர்வழியான 34 வயது சீன நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்து இருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

அந்தப் பெண்ணை ஒரு வார காலத்திற்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →