Sep 26, 2026
Thisaigal NewsYouTube
தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது
தற்போதைய செய்திகள்

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

Share:

படாஸ் ஆறு பகுதியில் உள்ள பாங்கி நீர்மின் நிலையம் அணை அருகே மாயமானதாக தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் இன்று காலை கண்டறியப்பட்டது.

காலை சுமார் 8.54 மணியளவில் அப்பகுதியில் பணியாற்றிய தொழிலாளர்கள் அம்மாணவரின் உடலைக் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுதியில் இருந்து அம்மாணவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்ததாக டெனோம் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அகமது ரசாலி ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றச்செயலுக்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்காததால், திடீர் மரணம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

மேலும், உடற்கூறு பரிசோதனையானது குயின் எலிசபெத் மருத்துவமனையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News