Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஆறு எல்லைப் பகுதிகளில் எரிபொருள் முறைகேடு சோதனை ! 36 இடங்கள் Hotspot மற்றும் 55 இடங்கள் அபாயம் நிலையில் உள்ளது .
தற்போதைய செய்திகள்

ஆறு எல்லைப் பகுதிகளில் எரிபொருள் முறைகேடு சோதனை ! 36 இடங்கள் Hotspot மற்றும் 55 இடங்கள் அபாயம் நிலையில் உள்ளது .

Share:

எரிபொருள் உதவித்தொகை முறைகேட்டைச் சமாளிக்க எல்லைப் பகுதிகளிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் காவல்துறையின் நடவடிக்கை வலுப்படுத்தப்பட்டுள்ளது. மலேசிய அரசு காவல் படை, உள்நாட்டு வர்த்தகம் வாழ்வாதாரச் செலவுத் துறை அமைச்சகம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறை, பொதுப்படை மற்றும் பிற அணிகளுடன் இணைந்து எரிபொருள் உதவித்தொகை முறைகேடு அதிகம் நிகழும் அபாயம் உள்ள எல்லைப் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவத்தாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இடைக்கால இயக்குனரான டத்தோ பிசோல் பின் சாலே தெரிவித்தார்.

இச்சோதனை கடந்த 15/4/2026 ஆம் திகதி காலை 6.00 மணி அளவில் நாட்டின் எல்லை பகுதிகளான பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய ஆறு எல்லை மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், அச்சோதனையின் மூலம் 36 பெட்ரோல் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகள் " HOTSPOT" இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதுடன் 55 இடங்கள் அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பத்தாக டத்தோ பிசோல் தெரிவித்தார். எரிபொருளின் உதவித்தொகையின் முறைகேடு அதிகரிப்பது உலகளாவிய எரிசக்தி நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய சூழ்நிலைகளைப் பாதிக்கப்படுவத்தாக அவர் கூறினார் .

இச்சோதனை முக்கியமாக காலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்படும்.இந்நேரம் பெட்ரோல் வணிகத்தின் உச்சநேரமாக இருப்பத்தால் அதிக அளவிலான முறைகேடு நிகழும் சாத்தியம் இருப்பத்தாக டத்தோ பிசோல் கூறினார். 24 மணி நேரம் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் முறைகேடு கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இடையேறாத முறையில் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

ஆகவே, இச்சோதனைகள் மலேசிய அரசு காவல்படையின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.அதுமட்டுமின்றி, உதவித்தொகைக்குத் தகுதியான மக்களுக்கு முறையாக எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார் டத்தோ பிசோல் பின் சாலே.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்