கடந்த மாதம் 27ஆம் தேதி சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அரச மலேசிய சுங்கத்துறை மேற்கொண்ட இரு அதிரடிச் சோதனை நடவடிக்கைளில் 13 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 10 கிலோ கொக்கேய்ன், ஹெரோயின் மற்றும் கெத்தாமின் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்த 83 வயதுடைய கொரிய பிரஜையிடம் நடத்தப்பட்ட முதலாவது சோதனை நடவடிக்கையில் 770,000 வெள்ளி மதிப்புள்ள 3.85 கிலோ கொக்கேய்ன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ சஸாலி முகமது கூறினார்.
அதிகாரிகளின் கண்ணில் படாமலிருக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட பயணப் பெட்டியில் அந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.எல்.ஐ.ஏ. சுங்கத் துறையின் பயணிகள் சோதனை பிரிவு மேற்கொண்ட இரண்டாவது சோதனையில் 21 வயது உள்நாட்டு ஆடவர் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், தனது வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த அந்த ஆடவர், தனது பயணப் பெட்டியை எடுப்பதற்காக விமான நிறுவனம் ஒன்றின் “காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட“பொருள்களுக்கான முகப்பிடத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார் என்றார்.
அந்த பெட்டியை ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது அதில் போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் அவர்.

தற்போதைய செய்திகள்
கே.எல்.ஐ.ஏ.வில் சுங்கத் துறை சோதனை- வெ.13 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


