ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல முக்காடும், பெண்கள் செருப்பும் ணிந்து கொண்டு பெண்கள் கழிப்பறையில் நுழைந்து ஒளிந்து பார்க்கும் வக்கிர செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
ஜோகூர்பாரு, தாமான் புக்கிட் டாலியா வில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தில் நேற்று காலை 11 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய அந்த ஆடவர் பொது மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று ஜோகூர், ஸ்ரீ அமான் போலீஸ் நிலையத் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.
திருமணமான அந்த நபரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு குற்றப்பின்னணி எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு ஏதுவாக குற்றவியல் சட்டம் 377 டி பிரிவின் கீழ் அந்த நபர் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முகமட் சோஹைமி குறிப்பிட்டார்.








