Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு மாணவர்கள் குறித்துப் பரவிய வதந்தி: உயர்க்கல்வி அமைச்சர் பதில்!
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு மாணவர்கள் குறித்துப் பரவிய வதந்தி: உயர்க்கல்வி அமைச்சர் பதில்!

Share:

கோல நெருஸ், ஆகஸ்ட்.10-

உள்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகளை வெளிநாட்டு மாணவர்கள் பறித்துக் கொள்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளை உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் கடுமையாக மறுத்துள்ளார். மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களில் 97.26 விழுக்காட்டினர் உள்நாட்டு மாணவர்கள் என்றும், வெறும் 2.74 விழுக்காட்டினர் மட்டுமே வெளிநாட்டினர் என்றும் அவர் புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டு மாணவர்களை விடக் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுவதும் முற்றிலும் தவறான தகவல் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசாங்கத்தின் மீது மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பரப்பப்படுவதாகக் கூறிய அவர், இத்தகையச் செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Related News