நாயின் வால் பகுதியில் தீ வைத்து, கொடுமைப்படுத்திய 18 வயது இளைஞனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 7 இலகு பிரம்படித் தண்டனை உத்தரவை, ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அதேவேளையில் அந்த இளைஞன் 10 ஆயிரம் வெள்ளி பிணை உறுதியில் ஓராண்டு காலம் நன்னடத்தை ஜாமீனில் இருக்க வேண்டும் என்று செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை உயர் நீதிமனற்ம் நிலைநிறுத்தியது.
பிரேடன் யாப் ஹொங் சேங் என்ற அந்த இளைஞனுக்கு விதிக்கப்பட்ட நன்னடத்தை ஜாமீன் தண்டனையே போதுமானதாகும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சே வான் ஸைடி சே வான் இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இளைஞன் கடந்த மார்ச் 27 ஆம் தேதி அதிகாலை 1.49 மணியளவில் ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் எமாஸ், ஜாலான் இம்பியான் எமாஸ் 22 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


