Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சபா, சரவாவிற்கு விமானக் கட்டணம் 599 வெள்ளி மட்டுமே

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சபா, சரவாவிற்கு விமானக் கட்டணம் 599 வெள்ளி மட்டுமே

செபாங் , செப்டம்பர் 03-

பெருநாள் மற்றும் விழாக்காலங்களில் தீபகற்ப மலேசியாவிற்கும், சபா, சரவாவிற்கும் விமானக்கட்டணத்தின் உச்ச வரம்பு விலை 599 வெள்ளி மட்டுமே என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எல்லா நிலைகளிலும் சீரான கட்டணமுறை விதிக்கப்படுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பட்டதாரி மாணவர்களுக்கு வருடாந்திர உதவித்தொகையை கொண்டுள்ள FLY siswa விமானச் சேவைக்கு வழங்கப்பட்டு வரும் கட்டண சலுகையை தொடர்வதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →