Oct 1, 2026
Thisaigal NewsYouTube

மாது கொடூரக் கொலை: ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாது கொடூரக் கொலை: ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

சிரம்பான், டிசம்பர்.20-

நெகிரி செம்பிலான், பெடாஸ், கம்போங் பத்து 4, வில் ஒரு பாழடைந்த வீட்டில் மாது ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பையினுள் அழுகிய சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடிபட்ட நபர்களில் முக்கிய சந்தேகப் பேர்வழியான 51 வயது நபர், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 7 நாட்கள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.

சிரம்பான் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூருல் ஃபார்ஹா சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழியைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஏதுவாக தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் துணைத் தலைவர் ஏசிபி முகமட் இட்ஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டார்.

கொலை செய்யப்பட்ட மாது, சிலாங்கூர் அம்பாங்கில் காணாமல் போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டவர் ஆவார் என்று முகமட் இட்ஸாம் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →