Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தங்கக் கட்டியைத் திருடியப் பெண் கைது
தற்போதைய செய்திகள்

தங்கக் கட்டியைத் திருடியப் பெண் கைது

Share:

29 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான தங்கக் கட்டியைத் திருடிய 25 வயது பெண்மணி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை 6.45 மணி அளவில் மலாக்கா தாமான் மாலிம் ஜெயா வில் உள்ள அவரது வீட்டில் மலாக்கா மாவட்டக் காவல் துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்தப் பெண்மணியைக் கைது செய்தனர்.

கடந்த மாதம் அக்டோபர் 30 ஆம் நாள் அந்தப் பெண்மணி தமது கடைக்கு வந்ததாகவும் வாடிக்கையாளரைப் போல் நடித்து 100 கிராம் எடை கொண்ட அந்தத் தங்கக்கட்டியைத் திருடிச் சென்றதாகவும் நகைக்கடையின் உரிமையாளர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

ஏறத்தாழ 3 நிமிடங்கள் வரை அந்தத் தங்கக்கட்டியை அந்தப் பெண்மணி கையில் வைத்திருந்ததாகவும் நிஸ்ஸான் லிவினா வகை காரில் அவர் தப்பிச் சென்றார் எனவும் அந்தக் காவல் துறை புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது என மலாக்கா தெங்ஙா மாவட்டக் காவல் துறை தலைவர் உதவி ஆணையர் க்ரிஸ்தோபர் பெதிட் தெரிவித்தார்.

ஒரு வார புலனாய்வுக்குப் பிறகு அந்தப் பெண்மணி காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தைத் தாம் செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
அந்தப் பெண்மணியின் வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில் அந்தத் தங்கக் கட்டி கண்டெடுக்கப்பட்டது. குடும்பப் பிரச்சனையாலும், வேலையில் இருந்து நீக்கப்பட்டதாலும் தமது நிலைமையை சமாளிக்க இந்தத் தங்கக் கட்டியைத் திருடி விற்க அப்பெண்மணி திட்டமிட்டிருந்ததை ஒப்புக் கொண்டதாக க்ரிஸ்தோபர் பெதிட் குறிப்பிட்டார்.

மேலும், தாம் வேலை செய்த உணவகத்தில் பணத்தைத் திருடிய விவகாரமும் தற்போது விசாரணையில் இருப்பதாக க்ரிஸ்தோபர் பெதிட் கூறினார்.

Related News