தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்.பில் தொழிலாளர்கள் சார்பாக முதலாளிமார்கள் தரப்பில் செலுத்தக்கூடிய சந்தா விகிதம், உயர்த்தப்படுமானால் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் வேலையிலிருந்து நிறுத்தப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
புள்ளிவிவர இலாகாவின் தகவல்படி கடந்த பிப்ரவரி மாதம் வரை நாட்டில் வேலையில்லாதவர்கள் விகிதம் 3.5 விழுக்காடு அல்லது 5 லட்சத்து 91 ஆயிரமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் தொழிலாளர்கள் சார்பாக முதலாளிமார்கள் தங்களின் பங்களிப்பாக செலுத்தக்கூடிய இபிஎப். சந்தா விகிதம் 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுமானால், வேலை நீக்கம் செய்யப்படக்கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் சாத்தியம் உள்ளது. இது வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை விகிதத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என்று மலாய் வர்த்தக சபையின் இடைக்கால தலைவர் நூர்ஷரின் ஹமிடொன் அச்சம் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


