May 22, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Share:

Kelantan - னில் RON95 பெட்ரோலை பயணிகளுக்கு விற்பனை செய்கின்ற சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர்களுக்கு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமை‌ச்சக‌ம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kelantan மட்டுமின்றி Perlis, Kedah, Perak ஆகிய பகுதிகளிலும் RON95 பெட்ரோலை பயனர்கள் அடிக்கடி வாங்குவதும், அதை சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் ஊக்குவிப்பதையும் கடுமையாக கண்டிப்பதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவின அமை‌ச்சக‌த்தின் துணை இயக்குநர் Shamsul Nizam Khalil தெரிவித்தார்.

Kelantan - னில் எல்லையோர பகுதிகளில், மலேசியாவில் பதிவு செய்யப்படாத வாகனங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 60 லீட்டர் வரையில் பெட்ரோல் வாங்குவது கண்டறியப்பட்டதாக Shamsul Nizam கூறினார். இந்த பெட்ரோலை பயன்படுத்தி சுமார் 500 முதல் 600 கிலோமீட்டர் வரையில் பயணிகள் பயணிக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Related News