Oct 16, 2026
Thisaigal NewsYouTube

குழந்தை பராமரிப்பாளர் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழந்தை பராமரிப்பாளர் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிச.12-


கடந்த வாரம் ஒரு வருட, இரண்டு மாத ஆண் கைக்குழந்தைக்கு காயம் ஏற்படும் அளவிற்கு கவனக்குறைவாக இருந்ததாக குழந்தை பராமரிப்பாளர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

49 வயது ஜோனித்தா முகமட் ஜோஹா என்ற அந்த குழந்தை பராமரிப்பாளர் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கோலாலம்பூர், வங்சா மாஜு, ஸ்தாபாக் ஜெயாவில் ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →