Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அந்த சர்ச்சைக்குரிய காணொளியை அகற்றினார் சுகாதார அமைச்சர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த சர்ச்சைக்குரிய காணொளியை அகற்றினார் சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன்.19-

பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங்கின் உடல் நிலை குறித்து அறிய அவரை நேரில் காணச் சென்ற சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட், அது தொடர்பான காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த காணொளியைத் தனது முகநூலிருந்து அமைச்சர் அகற்றினார்.

உடல் சுகவீனம் அடைந்து, கோலாலம்பூர் ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாராங் எம்.பி.யான ஹாடி அவாங்கை, சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அமைச்சரின் இந்த வருகையின் போது எடுக்கப்பட்ட காணொளி, சமூக வலைத்தளத்தில் அவர் பதிவேற்றம் செய்ததற்கு ஹாடி அவாங்கின் மகன் டாக்டர் முகமட் காலில் கடிந்து கொண்டார்.

தங்கள் குடும்பத்தின் அனுமதிப் பெறாமலேயே எடுக்கப்பட்ட வீடியோ எவ்வாறு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய முடியும் என்று அமைச்சரை டாக்டர் முகமட் காலில் சாடியிருந்தார்.

உடல் சுகவீனம் பட்டுள்ள தனது தந்தையின் தோற்றத்தைப் பொதுவில் வெளியிடப்பட்டதில் டாக்டர் முகமட் காலிலுக்கு உடன்பாடுயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →