கோலாலம்பூர், அக்டோபர்.05-
காஸாவுக்கான குளோபல் சுமுட் ஃபுளோதில்லா – GSF மாந்தநேயப் பணியில் கலந்து கொண்ட மலேசியத் தன்னார்வலர்கள், இஸ்ரேல் சிறையில் முகத்தில் தாக்கப்பட்டதாகவும், தலைமுடி இழுக்கப்பட்டதாகவும், 'மிருகங்களின் உணவு' போன்ற உணவே கொடுக்கப்பட்டதாகவும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். சக மனித உரிமைச் சட்ட ஆர்வலர்கள் குழுவுடன் இஸ்தான்புல்லில் அவர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ஃபாமி அப்துல் மோயின், இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர்கள் சிறைத் தண்ணீர் குழாயில் இருந்து நீர் அருந்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கொடூரமான சித்திரவதைக் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் மன்றத்திற்கு முழு அறிக்கை அனுப்பப்படும் என்று வழக்கறிஞர் குழு உறுதியளித்துள்ளது.








