Mar 23, 2026
Thisaigal NewsYouTube
இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

இஸ்கண்டார் புத்ரி பகுதியில் ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கை – 32 சம்மன்கள் வழங்கப்பட்டன

Share:

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, லெபு மெதினி உத்தாமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்பராசி சாம்செங் ஜாலானான்’ நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 32 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்கந்தர் புத்திரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் எம். குமரேசன் தெரிவித்துள்ளார்,

மேலும், அப்பகுதியானது சட்டவிரோத கார் பந்தயம் மற்றும் ஆபத்தான ஓட்டம் போன்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள் அதிகம் செயல்படும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் போது மொத்தம் 45 கார்கள் சோதனை செய்யப்பட்டதுடன், 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 63 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் அதில் ஈடுபட்டிருந்தனர்.

கார்கள் சட்டவிரோதமாக மாற்றம் செய்தல், குறிப்பாக புகை வெளியேறும் குழாய் மாற்றங்கள், விதிமுறைகளுக்கு உட்படாத வாகன பதிவு எண்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள், சாலை போக்குவரத்து துறையின் விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக எம். குமரேசன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மூலம் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகள் தொடரும் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை