Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவர் கைது

ஷா ஆலாம், ஜூன்.24-

சிலாங்கூர் மாநிலத்தில் அந்நியத் தொழிலாளர்களுக்கான வேலை பெர்மிட்டைப் பெறுவதற்கு பொய்யானத் தகவல்களை வழங்கிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நிறுவனம் ஒன்றின் நான்கு இயக்குநர்கள் உட்பட ஐவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இயக்குநர்களில் ஒருவர், வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஐவரும் இன்று செய்வாய்க்கிழமை ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலுக்கான அனுமதி பெறப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், 20 க்கும் 60 க்கும் உட்பட்ட வயதுடையவர்கள் ஆவர். அவர்களில் பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →