Oct 9, 2026
Thisaigal NewsYouTube

65 ஆயிரம் பொருட்கள் அழிக்கப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
65 ஆயிரம் பொருட்கள் அழிக்கப்பட்டன

ஷா ஆலாம், ஜூன்.24-

பறிமுதல் செய்யப்பட்ட 35 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 65 ஆயிரம் பொருட்களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அழித்துள்ளதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஸுஹைரி மாட் ராட்லி தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை அழிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையில் இதுவே அதிக மதிப்பைப் கொண்டதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான பொருட்களில் 41 ஆயிரம் பொருட்கள், செயற்கைப் பொருட்களாகும். சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்படும் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கு நடப்புச் சட்டம், அமைச்சுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக முகமட் ஸுஹைரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →