Mar 15, 2026
Thisaigal NewsYouTube
Sulu சுல்தான் வாரிசுதாரர் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு : குற்றத்திற்காக நடுவருக்கு 6 மாத சிறை
தற்போதைய செய்திகள்

Sulu சுல்தான் வாரிசுதாரர் வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு : குற்றத்திற்காக நடுவருக்கு 6 மாத சிறை

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொண்ட தரப்பினருக்கு மலேசியா 1,492 கோடி அமெரிக்க டாலர் அல்லது 6,714 கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய நடுவர் மன்றத் தலைவர் Gonzalo Stampa விற்கு ஸ்பெயின் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடுவர் Gonzalo Stampa-, குற்றவாளியே என்று தீர்ப்பு அளித்த ஸ்பெயின் நீதிமன்றம், 6 மாத சிறைத் தண்டனையுடன், நடுவர் மன்றத் தலைவராக செயல்படுவதிலிருந்து அவரை ஓராண்டு காலம் இடைநீக்கமும் செய்துள்ளது.

தீர்ப்பின் உள்ளடக்கத்தை சட்டத்துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman Said இன்று அறிவித்தார். சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொள்ளும் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கில் அரசாங்கம் கடுமையான போக்கை கொண்டுள்ளது என்பதற்கு இத்தீர்ப்பு ஓர் உதாரணமாகும் என்று Azalina Othman குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக சூலு தரப்பினர் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள Madrid நீதிமன்றத்தின் தீர்ப்பை நடுவர் மன்றத் தலைவர் Gonzalo Stampa பொருட்படுத்தாமல் செயல்பட்டதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் அளித்த புகாரைத் தொடந்து நடுவர் Gonzalo Stampa- விற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஸ்பெயின் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதிவு செய்தனர்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்