மைஏர்லைன் விமான நிறுவனத்தை சேர்ந்த மொத்தம் 533 ஊழியர்கள், சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் காப்புறுதி திட்டத்தின் அனுகூலங்களை பெறுவதறகு விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரையில் 277 விண்ணப்பங்களுக்கு சொக்சோ அங்கீகாரம் வழங்கியிருப்பதாக மனித வள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களாக இருந்த போதிலும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படாது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உரிய அனுகூலங்கள் கிடைப்பதை சொக்சோ உறுதி செய்யும் அதேவேளையில் வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும் வரை நிதி உதவி வழங்குவதும் இந்த அனுகூலங்களில் அடங்கும் என்று அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.








