Oct 20, 2026
Thisaigal NewsYouTube

சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகள் : கட்டுப்படுத்த புதிய திட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சுவிற்சர்லாந் , ஜூலை 09-

சுவிற்சர்லாந்தில்(Switzerland) அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, சுவிஸ் பெடரல் அரசு, மாகாணங்கள், சுவிஸ் நகரங்கள் மற்றும் நகராட்சிகள் இணைந்து புதிய புகலிட யுக்தி ஒன்றை உருவாக்கி வருதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் (SEM), புகலிடப் பகுதியில் தகவல் தொடர்பு, அகதிகளை அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மற்றும் சுவிஸ் புகலிட அமைப்பை வலிமையாக்குதல் ஆகியவை இந்த புதிய புகலிட யுக்தியில் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 1ஆம் திகதி, திருத்தப்பட்ட புகலிடச் சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, புகலிட அமைப்பின் மறுசீரமைப்பு அடிப்படையில் வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, புகலிட உத்தியை மதிப்பாய்வு செய்யவும், தேவைப்பட்டால் சரிசெய்யவும் வேண்டியுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இணைய மோசடி: 49 பேர் மீது குற்றச்சாட்டு; 8 மலேசியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

புகைமூட்டம்: பள்ளிகளை மூடுவது குறித்து மூன்று அமைச்சுகள் இணைந்து முடிவெடுக்கும் – ஃபாட்லீனா

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

அரச குடும்ப அந்தஸ்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடினால் நடவடிக்கை! சிலாங்கூர் சுல்தான் கடும் எச்சரிக்கை

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு

வகுப்பறையில் மூச்சுத் திணறல்; 7 வயது முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழப்பு