கோலாலம்பூர், டிசம்பர்.29-
ஜொகூர் பாரு சென்ட்ரல் (JB Sentral) மற்றும் கிம்மாஸ் (Gemas) இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அனைத்தும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி KTMB அறிவித்துள்ளது.
ஜொகூர் பாரு முதல் கிம்மாஸ் வரையிலான மின்மயமாக்கப்பட்ட இரட்டை இரயில் பாதை திட்டமான ETS இறுதிக் கட்டச் சோதனைகள் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் சேவைகள் நிறுத்தப்பட்டாலும், அதே வழித்தடத்தில் பயணிகள் தடையின்றி பயணிக்க ஷட்டில் கிம்மாஸ்-ஜேபி சென்ட்ரல் (Shuttle Gemas-JB Sentral) மற்றும் ஷட்டில் தெப்ராவ் (Shuttle Tebrau) ஆகிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று கேடிஎம்பி தெரிவித்துள்ளது.








