உள்ளூர் விமானச் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மைஏர்லைன்ஸ் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோரின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் ரம்லி யூசுப் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பண மாற்று நடவடிக்கையின் வாயிலாக மிகப்பெரிய சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளனவா? என்ற அடிப்படையில் அந்த உள்ளூர் விமானச் சேவை நிறுவனத்தின் முதலாளியான 57 வயது தொழில் அதிபர், அவரின் 55 வயது மனைவி மற்றும் 26 வயது மகன் ஆகியோர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று ரம்லி யூசுப் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் ஈடுபட்டு வந்த ஒரு வர்த்தகத் தொடர்பில் சட்டவிரோதமாக முன்பணம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ரம்லி யூசுப் தெரிவித்தார்.








