வெளிநாட்டுவாசிகளுக்கு வியாபாரன் செய்வதற்கான உரிமத்தை வழங்கியதில்லை என கிள்ளான் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
கிள்ளான் முனிசிபல் கவுன்சில் எம்பிகே மாவட்டத்தில் எந்த வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் உரிமம் வழங்குவதற்கு எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை.
அதன் வெளித் தொடர்பு பிரிவின் இயக்குனர் நோர்ஃபிசா மாஹ்ஃபிஸ் கூறுகையில், குறிப்பாக அப்பகுதியின் காலை சந்தைகளில் வியாபாரம் செய்யும் வெளிநாட்டுவாசிகள், உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்பவர்கள் ஆகியோருடன் தமது தரப்பு சமரசமாக நடந்து கொள்ளாது எனத் தெரிவித்தார்.
முறையான அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மீது கிள்ளான் நகராண்மைக் கழகம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். ஏனெனில் உரிமம் பெற்ற வணிகர்களின் உரிமைகளை மறுப்பது போல் அனுமதி இல்லாத வியாபாரிகளின் நடவடிக்கை அமைவதாகவும் அவர் கூறினார்.
எம் பி கே வுக்கு நேரடியாக் வந்து வியாபார லைசன்சை விண்ணப்பிக்க வேண்டும். எல்லா தகுதிகளும் பூர்த்தியாகும் நிலையில் நிச்சயமாக லைசன்ஸ் கொடுக்கப்படும் என நோர்ஃபிசா மாஹ்ஃபிஸ் குறிப்பிட்டார்.
இன்று காலை எங் அன் காலைச் சந்தையில் அமலாப்பக் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் வெளிநாட்டுவாசி ஒருவர் வியாபார லைசன்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்திருப்பது தெரிய வந்ததாகவும் அவரது பொருட்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டதாத் தெரிவித்தார்.
மேலும் 3 வியாபாரிகளுக்கு முறையான வியாபார அனுமதி ஆவணம் இல்லை எனவும் ஒருவருக்கு அது காலாவதி ஆகி இருந்தது எனவும் அவர் கூறினார்.








