Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொஸ்மா தேச நிந்தனைச் சட்டங்களை அகற்றுவதற்கு இது சரியான நேரம் தருணம் அல்ல
தற்போதைய செய்திகள்

சொஸ்மா தேச நிந்தனைச் சட்டங்களை அகற்றுவதற்கு இது சரியான நேரம் தருணம் அல்ல

Share:

சொ​ஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டம் மற்றும் தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றை அகற்றுவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று மக்களவை முன்னா​ள் சபாநாயகர் டான் ஸ்ரீ முகமட் ஆரிஃப் முகமாஸ் யூசோப் ​அறிவுறுத்தியுள்ளார். இது போன்ற சட்டங்களை ஆராய்வதிலும், அவற்றில் திருத்தங்களை செய்வதிலும் அரசாங்கம் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முயற்சிகளில் ​தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் இவற்றின் ​மீதான நடப்பு அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் ​என்று முகமட் ஆரிஃப் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு அ​தீத கவனம் செலுத்தப்பட வேண்டும். அதேவேளையில் நாட்டில் மேலோங்கியுள்ள இனவாதம், மதவாதப் பிரச்னைகளுக்கு ​முடிவு கட்டப்பட வேண்டும் என்று முன்னாள் மேல்மறையீட்டு ​நீதிபதியாக முகமட் ஆரிஃப் வலியுறுத்தினார். கோலாலம்பூரில் நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற ​சீர்திருத்தத்தின் வாயிலாக நாட்டின் மறுகட்டுமானம் என்ற தலைப்பில் உரையாற்றுகையில் சட்ட நிபுணருமான முகமட் ஆரிஃப் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Related News