கோத்தா பாரு, செப்டம்பர்.27-
கோத்தா பாருவைச் சேர்ந்த தம்பதி, கிங் கிராப் என்றழைக்கப்படும் 150 பெரிய வகை நண்டுகளை சுமார் 15 நிமிடங்களில் விற்று முடித்து அப்பகுதி மக்களை ஆச்சரியப் படுத்தியுள்ளனர்.
சாலையோர கடை ஒன்றில், முகமட் இக்மால் நூர் ஹாகிம் முகமட் யுசோஃப்பும், அவரது மனைவி நூருல் அல் ஃபாதோனா அவாங்கும் 85 ரிங்கிட்டுக்கு இந்த நண்டுகளை விற்றுள்ளனர்.
ஆடம்பர கடல் உணவாகப் பார்க்கப்பட்டு வரும் இந்த கிங் கிராப்பை, மக்களுக்கு மலிவு விலையில் வழங்கி, எல்லோரும் அதனை சுவைக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நண்டு விற்பனை செய்யும் இத்தம்பதியின் காணொளி டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகின்றது.








