Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பலாப்ஸ் பயிற்சியாளர் விவகாரம்: சட்டத்துறை தலைவர் முடிவு செய்வார்
தற்போதைய செய்திகள்

பலாப்ஸ் பயிற்சியாளர் விவகாரம்: சட்டத்துறை தலைவர் முடிவு செய்வார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சியாளர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் நடத்தப்பட்ட இரண்டாவது சவப் பரிசோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டு, அவரின் இறப்பு குறித்து மரண விசாரணை நடத்தப்பட வேண்டுமா? என்பது குறித்து சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்யவிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்யவிருக்கின்றனர். அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அந்த பயிற்சி மாணவனின் மரணம் தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை தலைவர் டுசுகி மொக்தார் தெரிவித்தார்.

அந்த மாணவனின் உடலில் காயங்கள் இருப்பது இரண்டாவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் அறிவித்து இருப்பது தொடர்பில் சட்டத்துறை தலைவர் கருத்துரைத்துள்ளார்.

Related News