கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
பகடிவதைச் சம்பவங்களை முற்றாக வேறுரக்க தொடக்கப்பள்ளியிலேயே பகடிவதை எதிர்ப்புப் பிரச்சார திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்வைத்துள்ள பரிந்துரையைக் கல்வி அமைச்சு முழுமையாக வரவேற்றுள்ளது.
மாமன்னரின் ஆலோசனைக்கு ஏற்ப பகடிவதை எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தொடர்பான திட்டங்கள் பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆரம்பப்பள்ளியிலிருந்து பகடிவதைக் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் சக மாணவர்கள் மீதான பரஸ்பர மரியாதை மற்றும் அன்பின் மகத்துவம் முதலிய பண்பியலை இழந்த ஒரு தலைமுறை உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக மாமன்னர் இன்று வலியுறுத்தி இருப்பது தொடர்பில் எதிர்வினையாற்றுகையில் கல்வி அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.








